உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
திங்கள், 09 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”

Panacea Tamil TV – தமிழ் செய்திகள் | Live Tamil TV & News – மாற்றத்திற்கான ஔடதம்

செய்தித் தொகுப்பு

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாகக் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகும் வாய்ப்பு காணப்படுகிறது. இதன்…

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: அவசரக் கட்டுப்பாடுகள் அமல்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முதற்கட்ட மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 21ஆம் திகதி டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 244 ஆக உயர்ந்தது. இன்று காலை 7 மணியளவில் அது 226 ஆகப் பதிவாகியுள்ளது. இது மோசமான…

இந்தியாவில் பணவீக்க அழுத்தம்: ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் கொள்கை கவனம் பெறுகிறது

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியைத் தொடர்ந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுக் கூட்ட விவரங்கள் அக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்பட்டன. அதன்படி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொள்கை வட்டி விகிதத்தை 0.25 சதவீதப் புள்ளிகள் உயர்த்துவதற்கு குழுவின் ஆறு…

இந்தியா – போலந்து உறவு: பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவை முக்கிய விவாதப்…

இலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்: முதல் வெற்றிக்காக இரு அணிகளும் மோதல்

  பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று ராவல்பிண்டி மைதானத்தில் மோதுகின்றன. இந்தத் தொடரில் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன. இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ்…

இலங்கையில் மின்வெட்டு நெருக்கடி: நுரைச்சோலை மின் நிலையம் மீண்டும் இயங்க நடவடிக்கை

இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் 17ஆம் திகதி ஏற்பட்ட நாடளாவிய மின்தடை காரணமாக மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையின்மை ஏற்பட்டது. இதன் விளைவாக நுரைச்சோலை…

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் சிலை: 14 பேரிடம் பொலிஸ் விசாரணை

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை நிறுவப்பட்டமை தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அக்டோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே…

கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அக்டோபர் 21 அன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் பின்னணியில் அவருக்கு…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை முக்கிய பரிந்துரைகள்

இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of the State from Terrorism Act – PSTA) என்ற பெயரில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் சில…

கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 25 மாடி குடியிருப்பு சேதம், ஒருவர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் நேற்று (19) அதிகாலை நடத்திய ஏவுகணை தாக்குதலில் சோலோமியான்ஸ்கி பகுதியிலுள்ள 25 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவினால் ஏவப்பட்ட சுமார் 269…

அமெரிக்கா தாக்கினால் 9 நாடுகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது இராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி தொழிற்சாலைகளைக் குறிவைத்தனலோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் 9 ஆதரவு நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகரும், பழமைவாத அரசியல்வாதியுமான…

சீன விண்கலம் மூலம் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் நவம்பரில் விண்வெளிக்கு பயணம்.

பாகிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர், சீனாவின் விண்வெளி மையம் மூலமாக வரும் நவம்பர் 25 ஆம் திகதி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையத்தின் (Suparco) கூட்டுடன் நரோவாலில் நடைபெற்ற உலக விண்வெளி வார நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திட்டமிடல்…