உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
திங்கள், 09 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இலங்கை

குவைத்தில் இரண்டு இலங்கை பெண்கள் மர்மமான முறையில் மரணம்

எழுத்து அளவு:
குவைத்தில் இரண்டு இலங்கை பெண்கள் மர்மமான முறையில் மரணம்

குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த 2 சம்பவங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

மர்மமான முறையில் மரணம்

முதலாவது சம்பவத்தில், Ali Sabah Al-Salem பகுதியில் உள்ள வீடொன்றின் கூரைமேலுள்ள சேமிப்பு அறையில் இலங்கை பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குவைத்தில் இரண்டு இலங்கை பெண்கள் மர்மமான முறையில் மரணம் | 2 Sri Lankan Women Dead In Kuwait

குவைத் நாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 1988ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான மரணமாக பதிவு செய்யுமாறும், சடலத்தை சட்ட மருத்துவ பிரிவிற்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டது.

பெண்ணின் சடலம்

அத்துடன், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குவைத்தில் இரண்டு இலங்கை பெண்கள் மர்மமான முறையில் மரணம் | 2 Sri Lankan Women Dead In Kuwait

மற்றொரு சம்பவமாக, Al-Nahda பகுதியில் மற்றுமொரு இலங்கை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு பிறந்த இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் சம்பவத்தின் பின்னணியை உறுதிப்படுத்துவதற்கும் சடலம் சட்ட மருத்துவ பிரவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது சம்பவம் குறித்து பிரஜை ஒருவரிடமிருந்து அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும் விசாரணைகளை நடத்தவும் தடயவியல் நிபுணர்கள், மருத்துவ பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram