உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்த யானை ‘கவந்திஸ்ஸ’ உயிரிழப்பு: பேராதனை நிபுணர் குழு ஆய்வு

எழுத்து அளவு:
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்த யானை ‘கவந்திஸ்ஸ’ உயிரிழப்பு: பேராதனை நிபுணர் குழு ஆய்வு

இலங்கையின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ‘கவந்திஸ்ஸ’, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

முன் வலது காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் படுகாயமடைந்திருந்த இந்த யானைக்கு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசேட கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சைகளை வழங்கி வந்தனர். எனினும், காயமடைந்த யானை எதனையும் உட்கொள்ள மறுத்தமையால் ஏற்பட்ட தீவிர நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அதன் உடல்நிலை மோசமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை (16) உயிரிழந்ததாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இந்த உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram