உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இந்தியா

மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு…!

எழுத்து அளவு:
மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு…!

மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவர் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று மாலை (18) மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், நடிகர் டைகர் ஷெராப் பயணித்த காரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது டைகர் ஷெராப் காயமின்றித் தப்பிய போதிலும், அவரது கார் ஓட்டுநர் மற்றும் அருகிலிருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மும்பை காவல்துறை 15 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இதுவரை சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram