உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 10 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
உலகம்

அமெரிக்கா தாக்கினால் 9 நாடுகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

எழுத்து அளவு:
அமெரிக்கா தாக்கினால் 9 நாடுகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது இராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி தொழிற்சாலைகளைக் குறிவைத்தனலோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் 9 ஆதரவு நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகரும், பழமைவாத அரசியல்வாதியுமான முகமது மொக்பர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசிற்கு நெருக்கமான ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தத் தாக்குதலுக்குள்ளாகும் 9 நாடுகள் எவை என்பது குறித்த விபரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க இராணுவ தளங்கள் தற்போது இயங்கவில்லை எனவும், அவை ஈரானில் இருந்து வெகு தொலைவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஈரானின் புரட்சிகர காவல் படையின் பேச்சாளர் ஹொசைன் மொஹேபி தெரிவித்துள்ளார்.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram