உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 10 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
உலகம்

கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 25 மாடி குடியிருப்பு சேதம், ஒருவர் பலி

எழுத்து அளவு:
கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 25 மாடி குடியிருப்பு சேதம், ஒருவர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் நேற்று (19) அதிகாலை நடத்திய ஏவுகணை தாக்குதலில் சோலோமியான்ஸ்கி பகுதியிலுள்ள 25 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவினால் ஏவப்பட்ட சுமார் 269 ட்ரோன்களில் 243 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram