நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, நேற்று முதல் மூன்று நாட்களுக்குக் கட்டம் கட்டமாக இந்த மின் விநியோகத் தடையை முன்னெடுப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த 17ஆம் திகதி நுரைச்சோலை மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கியின் உற்பத்தித் திறன் 187 மெகாவாட்டிலிருந்து 5 மெகாவாட்டுக்கும் குறைவாகத் திடீரென வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டதாகத் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.
பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

