உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இலங்கை

அக்குறணை வாகன விபத்து: உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியீடு

எழுத்து அளவு:
அக்குறணை வாகன விபத்து: உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியீடு

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை, 7ஆம் மைல் கல் குருகொட சந்தியில் சீமெந்து ஏற்றிக்கொண்டு பயணித்த லொறி ஒன்று பல வாகனங்களுடன் மோதி நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண், அக்குறணையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி மற்றும் அக்குறணையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது சுமார் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் சிகிச்சைக்காக கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மதுஅருந்தியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram