குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் பயணி ஒருவர் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு விமானப் பயணத்தின் போது மகப்பேறை எதிர்நோக்கியுள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 2.52 மணிக்கு குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி அல் ஜசீரா விமானம் புறப்பட்டுள்ளது. பிரசவக் காலம் நெருங்கிய பெண்களுக்கு விமானப் பயணங்களுக்கு அனுமதியில்லாத நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை அவர் விமானச் சேவை அதிகாரிகளிடமிருந்து மறைத்துப் பயணித்துள்ளார்.
தன் வயிற்றின் பருமனைக் காட்டாதவாறு உடலோடு ஒட்டிய டெனிம் ரகக் காற்சட்டையை அணிந்து அவர் விமானத்தில் ஏறியுள்ளார்.
பயணத்தின் போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் எவ்வித அசௌகரியமுமின்றி விமானத்தினுள்ளேயே அவருக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது.
பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

