உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 20 அக்டோபர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
இலங்கை

இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

எழுத்து அளவு:
இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்கு பின் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிadministratorத்துள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் மேல் மற்றும் வட மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram