இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் தளர்வு நிலை மேலும விருத்தியடைந்து வருவதால், இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துளது.
இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

