உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 10 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
உலகம்

ஈக்குவடோரில் திருப்பலியின் போது சிலுவை தலையில் விழுந்து அருட்தந்தை உயிரிழப்பு

எழுத்து அளவு:
ஈக்குவடோரில் திருப்பலியின் போது சிலுவை தலையில் விழுந்து அருட்தந்தை உயிரிழப்பு

ஈக்குவடோரில் தேவாலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்த போது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று தலையில் விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பட்டரிசியோ அல்ஃபிரெடோ சான்செஸ் மொலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) என்ற அருட்தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள ‘பெர்பெத்துவோ சொக்கோரோ’ (Perpetuo Socorro) தேவாலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருப்பலி நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே, அருட்தந்தைக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை கழன்று அவர் தலையில் விழுந்துள்ளது.

உடனடியாக தேவாலயத்திலிருந்தவர்கள் அவருக்கு உதவ முன்வந்ததுடன் அவசர உதவிச் சேவையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram