உள்ளடக்கத்திற்குச் செல்க (Skip to content)
செவ்வாய், 10 நவம்பர் 2026 “மாற்றத்திற்கான ஔடதம்”
உலகம்

மிரட்டல் காரணமாக வியன்னா சென்ற ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி சோபியாவில் தரையிறக்கம்.

எழுத்து அளவு:
மிரட்டல் காரணமாக வியன்னா சென்ற ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி சோபியாவில் தரையிறக்கம்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குப் பயணித்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி, மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பல்கேரியாவின் தலைநகர் சோபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

OS82 என்ற இலக்கம் கொண்ட இந்த ஏர்பஸ் A320 ரக வானூர்தியில் 51 பயணிகளும் 6 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 57 பேர் பயணிகளாகவும் பணியாளர்களாகவும் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ருமேனிய எல்லைக்கு அருகில் வானூர்தி பறந்துகொண்டிருந்தபோதே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானி உடனடியாகச் செயற்பட்டு, வானூர்தியைச் சோபியா வானூர்தி நிலையத்துக்குத் திருப்பித் தரை இறக்க முடிவு செய்தார். நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, பல்கேரிய வான்படையின் போர் வானூர்தி ஒன்று சோபியா வானூர்தி நிலையம் வரை இதற்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், அதிலிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வானூர்தியில் விசேட பாதுகாப்புச் சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

இச்செய்தியை பகிருங்கள்:
WhatsApp Telegram